வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!!

வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!!

கோவை வைசியாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு முடிந்த இருந்த நிலையில் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஹெச்.பி ஆயில் நிறுவனத்தின் டீலரான சுபா கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் வேலை செய்யும் பணியாளர் அந்த வீட்டிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கொடுக்க செல்லும் பொழுது வீடு வெளிப்புற கதவு மூடப்பட்ட நிலையில் இருந்து உள்ளது. இதை பார்த்த அவர் வீட்டின் அலார மணியை அடிக்காமலும், கதவை தட்டி பார்க்காமலும், அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைக்காமலும் டெலிவரி செய்யாமல் திரும்பி சென்று உள்ளார். இது தொடர்பாக சுபா ஏரிவாயு ஏஜென்சி நிறுவன அலுவலகத்தில் முகவரிடம் புகார் தெரிவிக்க சென்ற போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வெங்கடேசனை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் காட்சிகள் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை