தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு… ரேசன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் பரபரப்பு ..!

மிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது .

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை தொடங்கி இருக்கின்றனர்.

பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருட்களை அதிக அளவு உணவு பொருட்கள் சப்ளை செய்து வரும் அருணாச்சலம் இம்பேக்ஸ் என்கிற நிறுவனத்தின் சென்னை மண்ணடி அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. மேலும் , காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், இன்டெர் கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் .

சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கும் காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் உள்ளிட்ட பாமாயில் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனைகள் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.