கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயை கடந்து உச்சத்தில் இருந்தது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று (2-ம் தேதி) கோயம்பேடு சந்தையில், தக்காளி ...

கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சொந்தமான 228 சிலைகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, அா்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய முயற்சியின் காரணமாக இந்தப் பெருமைக்குரிய விஷயம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் ...

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை அனைத்தும் இன்றைய தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.25 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகைக்கும், மீதமுள்ள ரூ.61ஆயிரத்து 912 கோடி மத்திய செஸ் வரி வசூலித்ததில் இருந்து நிலுவைத் தொகை ...

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. மொத்தம் 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ...

வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை மேலாளராக உமா மகேஸ்வரி என்ற பெண் 2018-2019=ம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.97,37,000 பணத்தை மோசடி செய்து அவர் சுருட்டியிருக்கிறார். இது குறித்து, துறை உயரதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதையடுத்து, குடியாத்தம் வங்கியில் ...

கோவையில் 1431ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் முகாம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நில அளவை கருவிகளையும் பார்வையிட்டார். இந்த வருவாய் தீர்வாயம் 11 வட்டாட்சியர் ...

இந்திய ரயில்வே சார்பாக ஜூன் 21 முதல் “ஸ்ரீ ராமாயண யாத்ரா” ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) 18 நாள் ஸ்ரீ ராமாயண யாத்திரையை ஜூன் 21ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுடன் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐஆர்சிடிசி, லக்னோவின் முதன்மை மண்டல மேலாளர் ...

உலகத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு காரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்டிலாக் 1 என்ற கார் தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கார் ஆகும். இந்த காரில் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் இருக்கிறது. இந்த காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவ ...

மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ...

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த 15 நாட்களில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் ...