ரேஷன் கடைகளில் 4000 காலி பணியிடங்கள்… சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க ..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசியும், மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.

இந்நிலையில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்ய கடந்த ஆட்சியின் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை தற்போது ரத்து செய்யப்பட்டு விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.