கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06804), சொர்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு ...

கோவை சிங்காநல்லூர் நந்தா நகரில் ஒருங்கிணைந்த சி.சி.டி.வி கேமரா மையம் துவக்கம். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ளது நந்தா நகர். இப்பகுதி மக்கள் ஒத்துழைப்போடு சிங்காநல்லூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி கோவையை சேர்ந்த “ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப” நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளம்மருத்துவர்களுக்கும், அறுவை சிகிச்சைத் துறை மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைத் துறை மாணவர்களுக்கும் Johnson & Johnson Mobile Institute மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன மருத்துவ உலகில் சில அறுவை சிகிச்சைகளைத் தவிர பெரும்பாலான புற்றுநோய் மற்றும் இதர நோய்களை Laparos Copic Surgery மூலம் செய்ய ...

கோவை உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீனில் ரசாயன வாசம் வருவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் ...

கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர், 30-ந் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் ...

வாஷிங்டன்: ட்விட்டர் சமூகவலைதளத்தை வாங்கும் 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் , ஏற்கெனவே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ...

கடந்த சில மாதங்களில் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யுரிட்டீஸ் கூறுகையில், கடந்த இரண்டு ...

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார் பின்னர் மதுக்கரை வட்டாரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ...

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட கடைகளை தேர்வு செய்து அங்கு சூப்பர் மார்க்கெட்டில் விற்பது போன்று மளிகை பொருட்களை பாக்கெட்டில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 10,279 ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாக செயல்பட்டு வருகின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் ...

கரூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூர் குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 10,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ...