கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில் இளம் மருத்துவர்களுக்கும்‌, மாணவர்களுக்கும்‌ 2 நாள் பயிற்சி..!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளம்மருத்துவர்களுக்கும், அறுவை சிகிச்சைத் துறை மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைத் துறை மாணவர்களுக்கும் Johnson & Johnson Mobile Institute மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
நவீன மருத்துவ உலகில் சில அறுவை சிகிச்சைகளைத் தவிர பெரும்பாலான புற்றுநோய் மற்றும் இதர நோய்களை Laparos Copic Surgery மூலம் செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இளம் மருத்துவர்கள் இதைக் கற்றால் மட்டுமே பின்வரும் காலங்களில் அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கு நுண் அறுவைசிகிச்சை மூலமாகச் செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு Johnson & Johnson Mobile Institute மூலமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் இளம்மருத்துவர்களுக்கும், அறுவை சிகிச்சைத் துறை மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைத் துறை மாணவர்களுக்கும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஜூலை-7 மற்றும் 8-ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. Johnson & Johnson Mobile Institute Bus-60 Endotrainer பயிற்சி கற்கும் கருவி கொண்டு இந்த பேருந்தானது, நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சென்று பயிற்சி அளிக்க முன் வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மருத்துவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.