சென்னை: கனடாவில் ரூ.40 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக 116 பேரிடம் ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் புகார்கள் குவிந்து வருவதால் கைது செய்யப்பட்ட பெண் சாமியாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ...
மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றை மும்பை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 கிலோ கோகைன் போதை பொருள் இருந்தது. இந்த கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து பச்சை ஆப்பிள், பேரிக்காயை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்த பழங்களுக்கு ...
கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய குற்றவாளியால் பரபரப்பு… கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் ...
கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை – இளைஞரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி (55). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு கண்டியூர் பகவதி ...
மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் கைது கோவை வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இளம் பெண் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென இளம் பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகு நேரமாகியும் ...
கைது செய்த சினிமா தயாரிப்பாளரை வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு பிறகு விடுவித்த போலீஸ் … கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( 31). இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் சினிமாவில் கதாநாயகியாக ...
கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம் கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த ...
பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல் பட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ...
காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்.10-ம் ...
போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்: கோவையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை… கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது ...