கோவை ஓட்டலில் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது..!

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் பி.என். புதூர் மருதமலை ரோட்டில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் ரூ.3 ஆயிரத்தை திருடிக் கொண்டு ஒரு ஆசாமியை வெளியே வந்தார். இது குறித்து பன்னீர் செல்வத்துக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர் .அவர் விரைந்து வந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்து ஆர். எஸ் .புரம் . போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் வடவள்ளி தில்லை நகரை சேர்ந்த தங்கராஜ் மகன்டேவிட் ராஜா ( வயது 24 )என்பது தெரியவந்தது .அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.