50 லட்சம் ரூபாய் ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் நூதன முறையில் திருட்டுகு: டோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை 

50 லட்சம் ரூபாய் ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் நூதன முறையில் திருட்டுகு: டோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை 

கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் இளமாறன் (41). இவர் வெளிநாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் மில்லுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சிலிக்கான் ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வந்த பழ. அரவிந்தன் என்பவர் பழக்கமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் பழ .அரவிந்தன் மற்றும் அவரது மனைவி சௌமியா ஆகியோர் சிலிகான் ஆட்டோமேஷன் நிறுவன உரிமையாளர் இளமாறனை தொடர்பு கொண்டு டெக்ஸ்டைல் இயந்திரங்களை வாங்கி தருமாறு கேட்டுள்ளார் . மேலும் அதில் கிடைக்கும் லாபத்தில் பாதியை தருவதாகவும் கூறியிருக்கிறார்.இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளமாறன் வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை வாங்கி கொடுத்துள்ளார் .ஆனால் அதில் எந்தவிதமான லாபமும் கொடுக்காமல் பழ. அரவிந்தன் ஏமாற்றியுள்ளார். இதை அடுத்து பழ.அரவிந்தன் மீண்டும் இளமாறனை தொடர்பு கொண்டு போத்தனூர் கனரா வங்கி அருகில் தங்களுக்கு சொந்தமான குடோன் இருப்பதாகவும் அங்கு உங்களுக்கு தேவையான இயந்திரங்களை இறக்கி வைத்துக் கொள்ளவும் சர்வீஸ் செய்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். இதை நம்பிய இளமாறன் அங்கு தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களையும் சர்வீஸ் செய்ய டெக்ஸ்டைல் மில்லில் இருந்து கொண்டு வரப்படும் உதிரிபாகங்களையும் வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென அரவிந்தன் குடோனை பூட்டி விட்டார் .இளமாறன் பலமுறை நேரில் சென்று குடோனை திறக்குமாறு கூறியும் அவர் தான் வெளியில் இருப்பதாகவும் பிறகு வந்து திறப்பதாகவும் காரணம் கூறி காலம் தாழ்த்தி வந்தார் .இதை தொடர்ந்து இளமாறன் சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் உதவியுடன் குடோனை திறந்து பார்த்த போது அங்கு இருந்த ஜவுளி இயந்திரங்களின் உதிரி பாகங்கள் அனைத்தும் காணாமல் போய் இயந்திரங்கள் எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளமாறன் குடோன் உரிமையாளர் அரவிந்தனிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.இதன் பின்னர் அவர் உதிரி பாகங்களை வாங்கியது யார் என குறித்து விசாரித்த போது அரவிந்தன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களில் இருந்து அதனுடைய உதிரி பாகங்களை மட்டும் நூதன முறையில் திருடி ராம்குமார் என்பவரிடம் விற்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் விசாரித்த போது இளமாறனுக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்தும் ஜேக்கப் என்பவர் ஏராளமான எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டுகளை திருடி பூபாலன் என்பவர் மூலம் விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இளமாறன் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .புகாரின் பேரில் விசாரணை நடத்திய போத்தனூர் போலீசார் பழ. அரவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.