மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் 

மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் 

கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து கடைக்குள் சென்று கடையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில் இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் ஒரு நபர் இருச்சக்கர வாகனத்திலேயே நின்று விட மற்றொரு நபர் கடையின் முன்பக்க சி.சி.டி.வி காமிராவை மேல்புறமாக திருப்பி உள்ளார். மேலும் கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து மின் விளக்கை ஆன் செய்து சாவகாசமாக செல்போனை திருடிச் சென்றுள்ளார்.

இந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் தினேஷ் பாபு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.