என்னது! 4.5 லிட்டர் சரக்கு எடுத்து வரலாமா..?

மிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபான பாட்டில்களின் விலை குறைவாக இருக்கிறது. அதோடு, அங்கு மதுபான பாட்டில்கள் தனியார் கடைகளில் விற்கப்படுவதால் பல விதமான, வகையான மதுபாட்டில்கள் அங்கே கிடைக்கிறது.எனவே, தமிழ்நாட்டிலிருந்து மதுபான பிரியர்கள் பலரும் புதுச்சேரி சென்று மது பாட்டிலை வாங்கி அருந்துகிறார்கள்.

சிலர் தமிழ்நாட்டுக்கு மதுபான பாட்டில்களை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், புதுச்சேரி கலால் சட்டப்படி அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு மதுபான பாட்டில்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் புதுச்சேரி போலீசார் சோதனை செய்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்கிறார்கள்.

ஆனால், புதுச்சேரியிலிருந்து ஒருவர் 1680 லிட்டர் மதுபானத்தை தனது காரில் கொண்டு வந்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்தது. அப்போது, மனுதாரர் தொடர்பாக வாதிட்ட வழக்கறிஞர் ‘சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுவை ஒருவர் வைத்துக் கொள்ளலாம் என 2017ம் வருடம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. எனவே, ஆனால், இவர் 1680 லிட்டர் மதுவை மட்டுமே தனது காரில் வைத்திருந்தார். எனவே, அவர் மீது குற்றம்சாட்ட முடியாது’ என வாதிட்டார். இதை ஏற்று நீதிமன்றமும் இந்த வழக்கை ரத்து செய்தது.

இந்த செய்தி வெளியானதும் பாண்டிச்சேரியிலிருந்து இனிமேல் 4.5 லிட்டர் மதுபான பாட்டில்களை எடுத்து வரலாம் என நீதிமன்றமே சொல்லிவிட்டது என பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. எனவே, மதுபான பிரியர்கள் பலரும் இந்த செய்தியை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள கடலூர் காவல்துறை ‘உயர்நீதிமன்ற உத்தரவு டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு மட்டுமே பொருந்தும். புதுச்சேரி மற்றும் வெளி மாநில மதுபாட்டில்களுக்கு நீதிமன்ற உத்தரவு பொருந்தாது. புதுச்சேரி மாதுபாட்டில்களை கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும். வழக்கமான கட்டுப்பாடுகளே தொடரும்’ என விளக்கமளித்துள்ளனர்.