மே 1ம் தேதி மதுக்கடைகள் மூடல்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக் ) பார்கள் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்தும் தொழிலாளர் தினமான வருகிற 1 – ந் தேதி மூட உத்தரவிடப்படுகிறது. அதை மீறி மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.