இரவில் உலா வரும் சிறுத்தைகள் – பீதியில் மக்கள்

கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் ஊருக்கு தெற்கே அய்யாசாமி மலைப்பகுதிக்கு வடபுறம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் மலைக்காடு உள்ளது. இந்த மலைக்கோவிலில் கடந்த ஒரு மாதமாக 4 கருஞ்சிறுத்தைகள் 3 சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவைகள் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் தோட்டங்களுக்குள் நுழைகிறது. அப்போது நாய்களை வேட்டையாடுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பீதியில் உள்ளனர். மேலும் அந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.