அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழாவில் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாசமான உடைகள் அணிந்து நடனம் ஆடினால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ...

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது .இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மது கடைகள், நட்சத்திர மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் நாளை ...

சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சென்னை மாநாகராட்சி ஆணையர் ...

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 7,833 கனஅடியாகவும், மாலை 7,298 கனஅடியாகவும் நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 80.47 அடியாகவும், நீர்இருப்பு 42.42 டிஎம்சி.யாகவும் உயர்ந்துள்ளது. ...

கோவையில் நீண்ட காலத்திற்கு முன்பு நிலநடுக்க பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடப்படும்.இந்நிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் 3 மாடி கட்டிடம் காற்றில் அசைவதாக பரவியதாக புகாரளிக்கப்பட்டது. நிலநடுக்கமா அல்லது கட்டிடம் சேதமடைந்துள்ளதா என்று பதற்றம் ஏற்பட்டது. மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். ...

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் பலவீனமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று  மற்றும் நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் ...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தவும், பசு மாட்டின் கோமியத்தை (மாட்டுச் சிறுநீர்) ஒரு லிட்டர் ரூ.10-க்கு கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள 15 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 300 கிராமப்புறப் பெண்கள் இச்சேகரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோமியத்தைச் சேகரித்துத் ...

போலீஸார் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: போலீஸார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் ...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை ...

கடன் வாங்கியவர்கள் தவணையைச் செலுத்தத் தவறும்போது, வசூல் முகவர்கள் தொடர்ந்து அழைப்பது, மிரட்டுவது அல்லது அவமானப்படுத்துவது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் வசூல் நடைமுறைகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. கடன் ...