சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சென்னை மாநாகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சொத்து வரி உயர்வானது எதுவும் செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார். சென்னையில் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்க்கு மறுமதிப்பீடு செய்யப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் வரி செலுத்துபவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர் மேயர் பிரியா செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், ‘சொத்து வரி உயர்வு குறித்து எங்களிடம் அரசு கலந்தாலோசிக்கவில்லை. இந்த அறிவிப்பு வெளியிட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.






