நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது .இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மது கடைகள், நட்சத்திர மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் நாளை மூட உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக நாளை மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்






