திமுக வினரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவில் கோவை ஆவராம் பாளையம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது .. ஏன்? நீங்கள் மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்கிறீர்கள் என்று கேட்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது ..அது கைகலப்பாக மாறியது .இந்த மோதலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த 7பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து பீளமேடு போலீசில் மதிமுக வார்டு செயலாளர் குணசேகரன்புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி ஆவராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ. நிர்வாகிகள் ஆனந்தன், மாசானி சரவணன், லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகியோர் மீது சட்ட விரோதமாக கூடுதல் , அடித்து காயப்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.