சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது நன்றி அறிவிப்பு கூட்டம்…

கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் சொத்துக்களை தவறுதலாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் என பொது மக்களின் சொத்துக்களை பத்திர பதிவு செய்ய முடியாமல் பல மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான எந்தெந்த சொத்துக்கள் கண்டறியப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்களின் பத்திர பதிவு தடை ஆணைக்கு எதிரான உத்தரவு நகல் வழங்கப்பட்டது பத்திரப்பதிவு தடையை நீக்குவதற்கு உதவிய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வாக்கு வாரிய உறுப்பினரும் ஆன ப. அப்துல் சமது அவர்களுக்கு வக்பு வாரியத்தால் பாதிக்கப்பட்ட சொத்து உரிமையாளர் குழு சார்பாக நன்றி அறிவிப்பு கூட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த விழாவிற்கு பத்திரப்பதிவு எழுத்தாளர் ப. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் தொழிலதிபர்கள் வைரவேல் ,நிரஞ்சன், விஜயகுமார், ஆடிட்டர் சந்திரமௌலி, பாலசுப்ரமணியம், மகேந்திரன் , குணசேகர், பாத்திர எழுத்தாளர்கள் ராமநாதன் , வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

தமுமுக ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன், கடைவீதி பள்ளிவாசல் தலைவர் காஜி கலாமுல்லா மாவட்ட செயலாளர் குத்புதின், மாவட்ட துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் ஹக்கிம் , ஜாகிர் உசேன் , கோபி நகர தலைவர் ஆடிட்டர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர். நன்றி விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது ஏற்புரை வழங்கினார். இறுதியாக தொழில் அதிபர் மணிவண்ணன் நன்றியுரை வழங்கினார். இந்த விழாவில் தமுமுக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்