கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தை யொட்டி நாளை (பிப்ரவரி 14) அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 2 டி.ஐ.ஜி.க்கள் , 4 போலீஸ் சூப்பிரண்டு ,18 உதவி போலீஸ் கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார் , 100 அதி விரைவுப்படை போலீசார் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் இன்று மாலை முதல் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர். வாகனங்களில் வருபவர்கள் வெளிமாநில நபர்கள் லாட்ஜ்களில் தங்கி இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அத்துடன் சமூக வலைதளத்தில் பிரச்சனைக்குரிய தகவலை யாராவது பதிவேற்றம் செய்கிறார்களா ?என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது .கோவையில் 11 சோதனை சாவடிகளிலும் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.கோவில், சர்ச், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்..
Leave a Reply