கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு கத்தியால் இருவரை குத்திய மர்ம கும்பல் – பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள்
கோவை நீதிமன்றம் செல்லும் வழியில் திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது ஒருவர் பலியாகி மற்றொருவர் பயங்கர வெட்டுப்பட்டு அவசர ஊர்த்தியில் ஏற்றி செல்லப்பட்டார். ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நீதிமன்ற வளாகம் முன்பு நின்று இருந்த இருவரை தாக்கும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கி விட்டு சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. முன்விரோத காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா ? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா ? என்று காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற ஐந்து பேரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply