புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். ...

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், ...

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ...

விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அரசு இடையே, திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய ...

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து மத கோவில் கும்பாபிஷேகம் நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதனை தொடர்ந்து அங்குள்ள சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.’அஹலான் மோடி’ அதாவது ‘வணக்கம் மோடி’ ...

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், கடந்த பிப். 4 ஆம் தேதியன்று சென்ற கார் கஷாங் நுல்லா மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் என்பவர் மீட்கப்பட்டார். வெற்றி ...

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளைப் பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள், ஆயுதப்படை, பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கும் மெகா திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி, ...

கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூ ரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 55) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் உடல்நல குறைவின் காரணமாக லீவு போட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சத்தியமூர்த்தி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.இதையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று ...

கோவை க.க.சாவடி அருகே வாளையார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பாரும் உள்ளது. அந்த பாரை கோவை புதூரை சேர்ந்த  சதீஷ்குமார் (வயது 31) ஸ்டான்லி ( வயது 33) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) என்பவர் ஊழியராக ...