தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இந்த வருடமும் பொதுத்தேர்வு எழுத வர வேண்டிய மாணவர்களில் பலர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மூன்று, நான்கு வருடங்களாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. ...

ரயிலில் சென்று,விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு… கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் ...

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கோவை மாவட்டத்தில் காவல்துறை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான ...

ஈரான் போர் காரணமாக கோவை – அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் துபாயில் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமான ...

பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான குடும்பப் பிரச்னைகள் குறித்து செய்திகளை வெளியிடவோ, விவாதிக்கவோ அச்சு மற்றும் இணையதள ஊடகங்களுக்கு அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தம்பதியினரை மட்டுமின்றி, அவர்களின் மைனர் குழந்தைகளையும் மனதளவில் பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். ...

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக, அதிமுக இடையே கூட்டணி அமைந்தபிறகு, சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் ...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு ...

நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீாதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது இன்று அது வெளியே வந்திருக்கிறது. இது குறித்து ...

கோவை சுங்கம் பகுதியில் பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு,  இரு சக்கர வாகனங்கள்  வழங்கப்பட்டன. கோவை மாவட்டப் பகுதிகளில் பொது இடங்கள், தனி நபர்களின் வீடுகளில் புகும் பாம்புகளை மீட்கும் பணியில் பாம்புப் பிடி வீரர்களான அமீன், விக்னேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களான இவர்கள் இருவருக்கும் பாம்புகளை விரைந்து சென்று பிடிப்பதற்குத் தேவையான இருசக்கர ...

டெல்லி: புதிய மதுபானக் கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். தான் நிரபராதி என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, கடந்த 2021ம் ஆண்டில் ...