இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் (hydrogen train) சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது ஹைட்ரஜன் ரயிலை ஹரியான மாநிலம் ஜிந்த்-லலித் கேரா இடையே மணிக்கு 70 கி.மீ வேகத்தில் இயக்கி, வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக, சென்னை ஐ.சி.எப் ஆலையில் 118 கோடி ரூபாய் செலவில் ...
திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தத்தில், “திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷும் இன்று ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ரயில்வே திருமண மண்டபம் அருகே உள்ள பாலத்தின் அருகே ரயில்வே குடியிருப்பு உள்ளது .நேற்று முன்தினம் இரவு அங்கு சிறுத்தை ஒன்று ரோட்டை கடந்து காம்பவுண்ட் சுவரில் ஏறுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து ...
சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த சிலர், பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் லோகோ மற்றும் பெயர்களைப் பயன்படுத்திப் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்த போலி பக்கங்கள் வாயிலாக முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் அநாகரிகமான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, ...
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன.அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் ...
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 4,900 ...
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நீடித்து வருவதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது .பல நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். கோவை விமான நிலையம் வழியாக இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்த அபுதாபி மற்றும் ...
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது . இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை ...
தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு உள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அய்யாசாமிப்பட்டியில் ...













