தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.தவெக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது தவெக. ...
அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம், ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக 94981 80936 ...
கோழித் தீவனங்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாக ரூ.6.75 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் ...
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் ”இந்தியாவில் இணைய வசதி மிக எளிதாக கிடைப்பதால், சிறுவர்கள் உட்பட அனைவரும் ஆபாசப் படங்களை மிக எளிதாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கடுமையான அடிமைத்தனத்திற்கும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி ஆபாச பொருட்களைப் பரப்புவதும், வெளியிடுவதும் மட்டுமே குற்றமாகக் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் ...
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைய தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைந்தது. தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஒரு பிரிவினரும் அமமுக சட்டமன்ற உறுப்பினரும் ...
உலக அளவில் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த விமானப்படைகளைக் கொண்ட நாடுகளின் 2026-ஆம் ஆண்டுக்கான புதிய பட்டியலை ‘டபுள்யூ.டி.எம்.எம்.ஏ.'(WDMMA) அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய விமானப்படை தொடர்ந்து 5-வது ஆண்டாக 3-வது இடத்தைப்பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 103 நாடுகளைச் சேர்ந்த 129 வான்வழிச் சேவைகள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் இந்த ...
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் (Climate Science) ஆகிய நவீனப் பாடங்களைக் கொண்டு வருவது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் ...
தமிழகம் முழுவதும் 57 பெண் உதவி ஆய்வாளர்களை இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த 57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக ...
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ். அருண், போலீஸ் அகாடமிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக மகேஸ்வரி ஐபிஎஸ் இருந்துவரும் நிலையில் ...













