கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் நேற்று அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தார் .அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கிணத்துக்கடவு ...

கோவை மாநகராட்சி வார்டுகளில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி குப்பை கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு ...

கோவை வெள்ளலூர் ,ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிக்கந்தர் .இவரது மகன் சேக் முகமது (வயது 23) டிரைவர். இவர் நேற்று வெள்ளலூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவரிடம் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 24) இவரது தம்பி நவீன் குமார் என்ற நவீன் (வயது 19) ஆகியோர் ...

கோவை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் தனலட்சுமி ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 29ஆம் தேதி கடைக்கு செல்வதாக விடுதியில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் விடுதிக்கு ...

கோவை இருகூர்- பீளமேடு டைட்டில் பார்க் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

கோவை கோட்டைமேட்டில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 23ஆம் நடந்த கார்வெடிப்பு சம்பவம் நடந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது26) உயிரிழந்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர்.அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 வகையான ...

டெல்லி: குஜராத் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமோகமாக உள்ளது; மாத கடைசியில் இபி பில்லுக்குப் பதில் வருமானம் கிடைக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் ...

தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கலைஞர் திடலில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 700 பேருக்கு தையல் மிஷன்,400 நபருக்கு சலவை பெட்டி, 500 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், 61 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று ...

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தெரிவித்தாவது, “முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக அம்மா வழங்கிய தங்க கவசத்தை, 25 நாட்களுக்கு முன்பாகவே நாங்கள் ...

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின். மேலும் , விபத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ...