கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு..!

கோவை கோட்டைமேட்டில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 23ஆம் நடந்த கார்வெடிப்பு சம்பவம் நடந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது26) உயிரிழந்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர்.அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 வகையான பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 9 தனிப்படையினர் புலன் விசாரணை நடத்திவந்தனர்: இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் என்.ஐ-ஏ அதிகாரிகளுக்கு அலுவலம் வழங்கப்பட்டது.இவர்கள் நேற்று முதல் கட்ட பணிகளை தொடங்கினர். விசாரணை தொடங்கிய முதல் நாளான நேற்று காலை 11:45 மணியளவில் என் ஐ..ஏ .போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இருந்து 2கார்களில் புறப்பட்டு கார்வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் பகுதிக்கு வந்தனர். அங்கு கார்வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் உடன் இருந்தனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த பூசாரிகள், நிர்வாகிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர் .தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்ட ஆய்வு செய்தனர். ஆய்வை முடித்துக் கொண்டு என்.ஐ.ஏ .அதிகாரிகள் 2 கார்களில் புறப்பட்டனர்.என் ஐ.ஏ விசாரணை நடந்ததால் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் போலீசார் இரும்பு தடுப்பு வைத்து அடைத்து வாகனங்களை சோதனை செய்த பிறகு அனுமதித்தனர். .கோவிலின் முன்பு மற்றும் கோவிலில் உள்ளே சென்று அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு விசாரணை நடத்தினர். அத்துடன் லேசான சேதமடைந்த கோவில் நுழைய வாயில் பகுதியை பார்வையிட்டனர். மேலும் என் ஐ.ஏ அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் உதவியுடன கார் வெடிப்பு சம்பவ இடத்தின் வரைபடத்தை அங்கேயே வைத்து தயாரித்து வாங்கி சென்றனர். இந்த ஆய்வு மற்றும் விசாரணையானது 2 மணி நேரம் நடந்தது.