கோவை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பக்கம் உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் தனலட்சுமி ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 29ஆம் தேதி கடைக்கு செல்வதாக விடுதியில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் விடுதிக்கு திருப்பவில்லை.அவரது சொந்த ஊருக்கும் செல்லவில்லை. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவரது தந்தை முருகன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.