மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை ...
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. பாட்னா: பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியது. இந்த மதுவிலக்கு சட்டம் இருப்பதால், பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தொடங்கியது. இதனால், கள்ளச்சாராயம் தொடர்பாக பலரை காவல் துறையினர் கைது ...
தவாங்: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இந்திய எல்லையில் முதலில் காஷ்மீரில் உள்ள கிழக்கு லடாக்கில் கண் வைத்திருந்த சீனா தற்போது அருணாச்சல பிரதேசத்தி தவாங் பகுதியில் குறிவைத்துள்ளது. ஒருங்கிணைந்த காஷ்மீரில் உள்ள கிழக்கு லடாக் இந்தியா, சீனா இடையே காலம் காலமாக பிரச்சனைக்குரிய பகுதியாக உள்ள ...
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதனால் இரண்டு ...
லக்னோ: மதுவுக்கு ‘சைட் டிஷ்’ இல்லாததால் அருகில் இருந்த நாய்க் குட்டிகளின் காதையும், வாலையும் அறுத்து இளைஞர் ஒருவர் சாப்பிட்ட கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களின் பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த ...
இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா நேற்று அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி -5 ஏவுகணையை இரவில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் பாதுகாப்பு அமைச்சகம் சோதித்து பார்த்துள்ளது. 5,500 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து ...
மதுரையில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் சுமார் 2 அடி உயரமுள்ள மோடி பொம்மை விறுவிறுப்புடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் விறுவிறுப்பாய் விற்பனையாகும் பிரதமர் மோடி பொம்மை! திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடையில் சுமார் 2 அடி உயரமுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொம்மை ரூ.1,554க்கு ...
22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி: 2 பேர் கைது கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின் பேரில் தங்க கட்டி வாங்கி சென்று தங்க ...
கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் தாஸ் , ஏட்டு பாபு ஆகியோர் நேற்று ராமநாதபுரம் பங்கஜா மில் காலனி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 225 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ‘திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்பந்தம் காரணமாக கூட்டணி கட்சிக்கு நாம் ...











