நிலச்சரிவில் சிக்கி 140 பேர் பரிதாப பலி: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்…

த்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மழை வெள்ளதால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியது. இதுவரையிலும் மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஆப்பிரிக்கா ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி கூறியதாவது, ” இந்த விபத்து பற்றி கேட்டதும் மிகவும் வருத்தமடைந்ததாக கூறினார்.

மேலும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார். இதற்கிடையில் காங்கோவின் பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் இதுவரையிலும் 140 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.