லடாக்கில் இருந்து தவாங் பக்கம் தாவியுள்ள் சீனா – எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்..!

வாங்: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இந்திய எல்லையில் முதலில் காஷ்மீரில் உள்ள கிழக்கு லடாக்கில் கண் வைத்திருந்த சீனா தற்போது அருணாச்சல பிரதேசத்தி தவாங் பகுதியில் குறிவைத்துள்ளது. ஒருங்கிணைந்த காஷ்மீரில் உள்ள கிழக்கு லடாக் இந்தியா, சீனா இடையே காலம் காலமாக பிரச்சனைக்குரிய பகுதியாக உள்ள இடம். இங்கு இருநாட்டு வீரர்களிடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்களின் உச்சமாக கடந்த 2020ல் கல்வானில் கடந்த மோதலில் இந்திய வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரிகளிடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீனாவின் பார்வை கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதியான தவாங் பக்கம் தாவியுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு கரங்கள் தவாங் பகுதியை நோக்கி நீள்வதற்கு அப்பகுதி பல்வேறு சிறப்பியல்புகளை கொண்டதே காரணம். கடல் மட்டத்தில் இருந்து 1,700 அடி உயரத்தில் அமைந்துள்ள தவாங்கில் இருந்து ஒட்டுமொத்த அருணாச்சல பிரதேசத்தையும் கண்காணிக்க முடியும். முக்கியமாக சீனா, பூட்டான் எல்லையில் தவாங் உள்ளதால் தீபெத்தை இங்கிருந்து கண்காணிக்கலாம். இங்கு மிகப்பெரிய புத்த மடாலயம் இருப்பதையும் இந்தியா அடைக்கலம் அளித்து வரும் திபெத் புத்த மத தலைவர் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வதையும் கவுரவ பிரச்சனையாகவே கருதுகிறது சீனா.

அமெரிக்காவில் உள்ள நயாகராவுக்கு இணையான பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி ஒன்றையும் சேர்த்து தவாங் பகுதியில் மட்டும் 108 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்ற முடிவு செய்துள்ள இந்திய அரசு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவது சீனாவின் கண்களை உறுத்தி வருகிறது. இதன் காரணமாகவே தவாங் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, கனடாவுக்கு அடுத்ததாக உலகின் பெரும் நிலப்பரப்பினை கொண்டுள்ள நாடு சீன என்று அறியப்பட்டாலும் அதன் மொத்த நிலப்பரப்பில் 43% ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.