கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் தாஸ் , ஏட்டு பாபு ஆகியோர் நேற்று ராமநாதபுரம் பங்கஜா மில் காலனி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 225 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரம், திருவள்ளுவர் நகர் பக்கம் உள்ள பாலாஜி நகர் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 44) என்பது தெரியவந்தது. கஞ்சாவும், கஞ்சாவிற்ற பணம் ரூ 78 ஆயிரத்து 180, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply