நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் முன்மொழிந்த அரசினர் தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் விஜய் கொண்டு ...
நாம் ஒரு சில கோயில்களுக்கு போகும் போது அங்கே, ‘உங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்’ என்கிற வாசகத்தை படித்திருப்போம். அந்த வகையில், தற்போது, அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களுக்குள், பக்தர்கள் செல்லும் போது கைப்பேசி எடுத்து செல்வதற்கான தடை ஏற்கனவே ...
அரிசி, காய்கறிகள், பலசரக்கு பொருட்களைத் தொடர்ந்து சாமானிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.7 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் சர்க்கரைக்கு அதிக தேவை இருக்கும். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் இனிப்பு பலகாரங்கள் தேவையும் விற்பனையும் அதிகரிக்கும். நடப்பு பருவத்தில் ...
2026 காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடி பதக்கம் வென்ற ...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை ...
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட ...
கடன் வாங்கியவர்கள் தவணையைச் செலுத்தத் தவறும்போது, வசூல் முகவர்கள் தொடர்ந்து அழைப்பது, மிரட்டுவது அல்லது அவமானப்படுத்துவது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் வசூல் நடைமுறைகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. கடன் ...
எங்க சாப்பாடு போடுறாங்களோ அங்க போறேன் என சட்டசபை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலகலப்பாக தெரிவித்தார். எப்போதும் முகத்தை சிடு சிடு என வைத்துக் கொள்ளும் அவர் இன்று சிரித்த பேசியதால் அவரை சுற்றி இருந்தவர்களும் சிரித்துவிட்டனர். தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பல்வேறு ...
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 15 நீதிபதிகளை நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நீதித்துறை நிர்வாகத்தை விரைவுபடுத்தவும், நிலுவையில் உள்ள வழக்குகளைச் சீக்கிரமாக விசாரித்து முடிக்கவும் ஏதுவாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்டுள்ள 15 புதிய நீதிபதிகளில் 8 பேர் வழக்கறிஞர்கள் பிரிவிலிருந்தும், 7 பேர் மாவட்ட நீதிபதிகள் பிரிவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வழக்கறிஞர்கள் பிரிவில் ...
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விமானப் பயணிகள் அல்லாத பார்வையாளர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழையப் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்காக வழங்கப்படும் நுழைவுச் சீட்டுகள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. விமான ...













