சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளாா். திமுக அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி, அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிா் ஆனந்த், ...
இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா.. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 10:30 ...
டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி நடைபெற்று அதில் வெற்றி பெற்றுள்ளது. ட்ரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்த முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ட்ரோன்கள் மூலம் ...
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வன்முறையில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அகற்றப்படுவர் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஏ கட்சி தலைவருமான இம்ரான் கான் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றம் சென்ற போது ...
ரசாயன கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்த 22.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்: ரூபாய் 12,56,400/- பழங்கள் குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிப்பு – உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், ...
திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளை அரைத்து கூழாக்கி உரம் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.. இதற்காக, சென்னையில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ...
சென்னை: மணிப்பூரில் மோரே பகுதியில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் திரும்ப விரும்பிய 5 மாணவர்களுக்கு விமான டிக்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், அங்குவசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற ...
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குனோ தேசிய பூங்காவில் கடந்த 42 நாள்களில் உயிரிழந்த 3-ஆவது சிவிங்கிப் புலி இதுவாகும். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், ...
தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் ...
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. நீலகிரியில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. மார்ச் 27ம் தேதி கடந்த கணித தேர்வின்போது ஊட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியான சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ...













