அண்ணாமலையை கேள்வி கேட்ட பிரபல பத்திரிகை நிருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘லண்டனில் நீங்கள் செந்தில் பாலாஜி சகோதரரை சந்தித்தீர்களா என்ற கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டார். அவரிடம் சரமாரியாக மறு கேள்விகள் கேட்ட ...

விருத்தாசலம்: டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் தொகை வாங்கினால் ‘டிஸ்மிஸ்’ என அரசு இருதினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த அறிவிப்பு மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அரசுக்கு பல்வேறு சர்ச்சைகளும் சங்கடங்களும் ஏற்பட்டன. இந்த ...

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை. இதனை மத்திய அரசிடம் இருந்து வாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் திறந்த ஒப்பந்த புள்ளிகள் கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை ...

டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு முதல் பின்னடைவாக, மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்தும் வருகிறது. பாஜகவை லோக்சபா தேர்தலில் வீழ்த்த அனைத்து ...

சென்னை: ஹைதராபாத் டெக்கான் விரைவு ரயில் நேற்று காலை சூலூர்பேட்டை- அக்கம்பேட்டை இடையே வந்தபோது, ஒரு பயணி அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரயில் கலிங்க ஆற்றுப் பாலத்தின் மீது நின்றது. ரயிலின் குறிப்பிட்ட பெட்டியில் ஏற்பட்ட காற்று அடைப்பை சரிசெய்ய முடிவு செய்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, ...

டெல்லி: தமிழ்நாட்டில் ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு ...

தி.மு.க., அரசின் ஊழல்களை வெளிப்படுத்துவதற்காக, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த பாதயாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அக்கட்சியினர் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், தி.மு.க., அரசின் தவறுகளை, அமைச்சர்களின் ஊழல்களை, ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். இதையடுத்து, ‘தி.மு.க., பைல்ஸ் பார்ட் – 2’ என்ற பெயரில், பாதயாத்திரையின் ...

சென்னை: ‘போலி ஆவணங்கள் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க, அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்தார். அவரது பதவி நேற்று முன்தினம் பறிக்கப்பட்டு, காவல் துறையின் ...

சென்னை: தனி அமைப்பை நியமித்து பட்டுக்கோட்டை நகைக் கடை அதிபர் தற்கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டைக் கடித்து.. மாட்டைக் கடித்து.. மனிதனைக் கடித்த கதையாக, இந்த திமுக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் ...

புதுடெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், ...