சூலூரில் பல்லுயிர் பூங்கா… மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார்..!

கோயமுத்தூர் மாவட்டம் : சூலூர் 16, 17வது வார்டுகளில் அமைந்துள்ள நடராஜ் நகரில் பேரூராட்சி சொந்தமான பூங்கா இடத்தில் ப்ரொபல் கம்பெனியின் சி எஸ் ஆர் நிதியிலிருந்து ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் பல்லுயிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த இந்த பூங்காவில் மூலிகை தாவரங்கள் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் செல்பி புகைப்படம் எடுக்கும் இடம் முதியவர்கள் ஓய்வெடுத்து நாளிதழ் படிக்க இடம், சிறுவர்கள் விளையாடுவதற்காகவும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இப் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு  மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி திறந்து வைத்தார். பூங்காவில் மூலிகை செடியை நட்டு வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி இடத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். நிகழ்வில் ப்ரொபைல் கம்பெனி ஷேர் மேன் வரதராஜன் மேனேஜிங் டைரக்டர் செந்தில்குமார் மற்றும் வித்யா செந்தில் குமார், திமுக சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், ராக் அமைப்பு, பூங்கா வடிவமைப்பு கொடுத்த சிவம் துளிர் தேன்மொழி பேரூராட்சி , சூலூர் திமுக நகர செயலாளர் கௌதமன்,வார்டு உறுப்பினர்கள் பசுமை நிழல் விஜயகுமார் , வீராசாமி, பாலாஜி, வேலுச்சாமி, தங்கமணி, கிருத்திகா, விஜயலட்சுமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..