வேலை தருவதாக கூறி பட்டதாரிபெண்ணிடம் ரூ. 29 லட்சம் ஆன்லைன் மோசடி

கோவை பீளமேடு காளப்பட்டி ,நேரு நகர் கிருஷ்ணா பார்க் பகுதியில் வசிப்பவர் ஆனந்தகுமார்.இவரது மனைவி வித்யா (வயது 46) இவரது செல்போன் இணைப்புக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில்வீட்டில் இருந்தே நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கு ஒரு நிறுவனத்தில் சிறிய தொகை முதலீடு செய்தால் போதும்.கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி வித்யா அந்த முகவரிக்கு பல்வேறு தவணைகளில் ரூ 29 லட்சத்து 31 ஆயிரம் அனுப்பி வைத்தார். லாபமும் வரவில்லை. சம்பளமும் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வித்யா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.