கோவை சரவணம்பட்டி பி. அன்ட்.. டி காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தாரணி ( வயது 24) பி. இ பட்டதாரி. இவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவனாம்பாளையம், ராமகிருஷ்ணாநகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்ற செல்வராஜ் மகன் ஆகாஷ்ராஜ் (வயது 28) என்பவருக்கும் 22- 10- 20 18 அன்று திருமண நடந்தது.திருமணத்தின் போது 200 பவுன் நகையும் மாப்பிள்ளைக்கு 5 பவுன் செயின், வைர மோதிரம் மற்றும் , 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது.இந்த நிலையில் கணவர் குடும்பத்தினர் தாரணியிடம் உன் தந்தையிடம் கார் மற்றும் ரூ 40 லட்சம இது தவிர சொத்தையும் எழுதி வாங்கி வர வேண்டும் என்று கேட்டு துன்புறுத்தி வந்தனர் .இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு தாரணி கர்ப்பமாக இருந்தார். அப்போது கணவர் குடும்பத்தினர் தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தாரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அவருக்கு இரட்டை குழந்தை பிறந்து இறந்து விட்டது அதை தொடர்ந்து தாரணிக்கு திருமணத்தின் போது போட்ட 200 பவுன் நகையில் 100 பவுன் எடுத்துக்கொண்டனர். மேலும் கார் மற்றும் சொத்தை எழுதி வாங்கி வராவிட்டால் உன்னை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவோம் .பிறகு நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறிவிடுவோம்.என்று கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டினார்கள். இது குறித்து தாரணி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் புகார் செய்தார் போலீசார் கணவர் ஆகாஷ்ராஜ் ,மாமனார் சவுந்தர்ராஜ் என்ற செல்வராஜ், ,மாமியார் கலை வாணி என்ற சுமதி, நாத்தனார் சவுமியா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.