மளிகை கடையில் பணம்,சிகரெட் திருடிய 3 சிறுவர்கள் கைது.!

கோவை அருகே உள்ள வீர கேரளம், திம்மையா நகரை சேர்ந்தவர் பொன்சுப்பையன். ( வயது 51) இவர் அங்குள்ள பெரியார் நகர் 6-வது வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் மர்ம ஆ சாமிகள் புகுந்து அங்கிருந்த பணம் ரூ 5200 மற்றும் 10 பாக்கெட்டு சிகரெட் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து பொன் சுட்பையன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் 3 பேரை கைது செய்தார் .இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில். சேர்க்கப்பட்டனர்.