சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து அவரிடம் ...

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடயை மகன் சந்தோஷ் (வயது 29). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக நேற்று சென்றார். மது வாங்கிய அவர் அங்குள்ள பாரில் அமர்ந்து குடித்துவிட்டு வெளியில் வந்துள்ளார் . அப்போது டாஸ்மாக் மதுக்கடை முன்பு அவரை 5 பேர் கொண்ட ...

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை – சிறுவாணி சாலை மத்வராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் பேரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே வகுப்பில் படித்து வந்த ...

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை ...

இந்திய கட்டிடக்கலை வளர்ச்சிக்கு துணையாக இருப்பதாக பல கட்டிடக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கட்டடம் ‘ஸ்ரீ யந்திரத்தால்’ ஈர்க்கப்பட்டது. இது பாரம்பரிய இந்து பூஜைகளில் பயன்படுத்தப்படுவதாகும். நல்ல ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது. கோனார்க் சூரியன் கோயிலின் தேர் சக்கரத்தின் பெரிய பித்தளை சிற்பம் கூட இந்த மாளிகையில் உள்ளது. இங்குள்ள மூன்று பொதுக் காட்சிக்கூடங்களில் ஒன்றான ...

அரிக்கொம்பன் யானை தாக்கி பலத்த காயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என அழைக்கப்படும் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் யானை பிடிக்கபட்டு, தமிழக- கேரளா எல்லை பகுதியில் ...

ரூ.2,000 நோட்டுகளை எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமல் வங்கியில் மாற்றிக் கொள்ளும் அறிவிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்திய ரிசா்வ் வங்கியால் (ஆா்பிஐ) அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், அவை மக்களிடையே பெரிதும் ...

ஜம்முவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயம். ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸில் இருந்து கத்ரா நோக்கிச் சென்ற பேருந்து இன்று காலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் ...

சென்னை: ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் ...

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதி படைத்த கைதிகள், மிக ரகசியமாக செல்போன்களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. இதன்பேரில், அவ்வப்போது சிறை சோதனைக்குழு காவலர்கள், அதிரடி சோதனையை நடத்தி செல்போன், சார்ஜர்களை ...