கோவையில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பொன்னுத்து மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன . இதில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களைத் தின்று சேதப்படுத்தி வருகிறது . இந்த நிலையில் துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சி கதிர் நாயக்கன்பாளையம் கணபதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 2 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மணி நேரம் போராடி காட்டுக்குள் யானையை விரட்டி அடித்தனர். காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்..