திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் மணப்பெண் தூக்கில் தற்கொலை.. கோவை சுந்தராபுரம், மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது மகள் சரண்யா (வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையொட்டி அவரது பெற்றோர்கள் பல்லடத்தில்உள்ள பொங்காளி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து சரண்யாவுக்கு போன் செய்தபோது போன் ...

கோவையில் 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை… தங்க வைர நகை -பணம் திருட்டு – மக்கள் பீதி..! கோவை கணபதியில் உள்ள ராயப்பாலே அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி ( வயது 27 )டிசைனர். இவர் பணியின் நிமித்தமாக பெங்களூர் சென்றார். இதனால் அவரது மனைவி நல்லாம் பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ...

கோவை துடியலூர் ஜி. என். மில். அன்னை கார்டன் அருகே அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை தினகரன் ( வயது 49) என்பது தெரிய வந்தது. இவர் சூலூர் அருகே ...

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு சுந்தராபுரம் சந்திப்பில் அனுமதி பெறாமல் ரோட்டில் இருபுறமும் 12 அடி உயரத்துக்கு 105 கொடிக்கம்பங்கள் நட்டியிருப்பது தெரியவந்தது .இது குறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணி சேகரன் சுந்தராபுரம்போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பத்தை அகற்றினார்கள். இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழககட்சியை ...

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம், தாமோதர சாமி லேஅவுட்டை சேர்ந்தவர் ராமநாதன் ( வயது 58) இவர் கடந்த 25ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் ...

கோவை அவிநாசி ரோடு லட்சுமிமில் சந்திப்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 -வது மாடியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்பாக இதை நடத்தி வந்த ...

கோவை அருகே உள்ள சூலூர் அய்யாவுதேவர் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஸ்ரீஜித்( வயது 33) இவரது தந்தை ராதாகிருஷ்ணன் ( வயது 66) தாயார் பூங்கொடி ( வயது 53) ஆகியோர் அப்பகுதியில் உள்ள திருமூர்த்தி பிள்ளை வீதியில் வசித்து வந்துள்ளனர். ஸ்ரீஜித்தும் அவரது தம்பி சரத்தும் தினமும் காலையில் சென்று பெற்றோர்களை பார்த்து ...

கோவை : திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்து 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதால் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் இங்கு முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிறுவனம் இங்கு முதலீடு செய்த 58 ஆயிரத்து ...

கொழும்பு: இலங்கை கடற்படையால் 14ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வர மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...

 பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், புலம்பெயர்ந்த பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்படுவது குறித்து மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை பத்திரிகையாளர் ...