தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று மாலை கோவை வந்தார். இன்று காலையில் ரேஸ் கோர்சில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு ஐ.ஜி. சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள ...
கோவையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது .இதன் காரணமாக மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவிநாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் கீழ்பகுதி, மற்றும் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.மேலும் சாய்பாபா காலனி சாலையில் மேம்பால பணிகளாலும் திடீர் மழையாலும் சாலை சேரும் ,சகதியுமாகி ...
சினிமா நடிகைகளை பற்றி தவறாக பேசுவது அரசியல் நாகரிகமா? இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? என நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக ...
இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற ...
நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் பெரும் விவாதத்தை கிஏற்படுத்தியுள்ளது .இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ...
சென்னை: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திமுகவினுடைய ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ...
ரயில் சேவைஅடிக்கடி ரத்து செய்யப்படுதல்:பெட்டிகள் குறைக்கப்படுதல்: ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம்:
பொருள்: ரயில் சேவைகளில் அடிக்கடி ரத்து செய்யப்படுதல், பெட்டிகள் குறைக்கப்படுதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் – உடனடி தீர்வு நடவடிக்கைக்கான கோரிக்கை: மதிப்பிற்குரிய ஐயா, இந்திய ரயில்வே, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயணிகளிடையே எப்போதுமே அளவற்ற நன்மதிப்பு, நம்பகத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பல தசாப்தங்களில், ரயில்வே அமைப்பு மிகவும் ...
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான அரசியல் நிலையில் திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தகைய சூழலில் தான், 144 வேட்பாளர்கள் ...













