சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3ஆவது நாளான இன்று, வினாவிடை நேரம் முடிவுற்ற பிறகு, நேரமில்லா நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தனித் தீர்மானங்களை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு சட்டப்பேரவையில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இரண்டு தீர்மானங்கள் பின்வருமாறு: ...
கோவையில் இன்று குண்டுவெடிப்பு நடந்த தினம் ஆகும். இதையொட்டி கோவையில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள் மசூதிகள் ,கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வஜ்ரா வாகனம் , கலவர தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன ..இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் ...
கோவை புலியகுளம், சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி .இவரது மகன் கபிலன் ( வயது 31 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் கபிலன் அவரது பெற்றோர்கள் இறந்ததை நினைத்து மன வருத்தத்தில் இருந்தார். நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ஹரிப்பிரியா (வயது 27 )இவருக்கு 8-12-2023 அன்று டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் சோகர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,அதை வீட்டிலிருந்தே செய்யலாம். அதற்கு அதிக சம்பளம் வழங்கப்படும் ...
கோவை: கேரள மாநிலம் வடகரை, குனின் காட் பகுதியை சேர்ந்தவர் கே.கே. ஜெசில் (வயது 31) ரெஸ்டாரன்ட் ஊழியர். இவர் உடல்நல குறைவின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வீரப்பனூரில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். லங்கா கார்னர் பாலம் அருகே இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ...
கோவை சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள ரங்கநாதபுரம் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) இவரது மகன் பிரபாகரன் ( வயது 39)சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை – அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பிரபாகரன் ஓட்டினார். தந்தை முத்துசாமி பின்னால் ...
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 5- 1 2019 அன்று சிறுமியின் தந்தை உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய செல்வபுரம் போலீசார் தந்தை அவரது 2 சகோதரர்கள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ...
திருச்சி பாஜக மகளிர் அணி சார்பில் Q20 வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆர்.ஜி.ஆனந்த், ஒண்டி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர். ஜி ஆனந்த் கேட்ட கேள்விகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய பதில்களை தெரிவித்தனர். அப்போது பாரதப் ...
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டும், அரை நிர்வாணத்துடனும், சாலையில் படுத்து உருண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ராமச்சந்திரன், பரமசிவம், நவீன்குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்தப்பகுதியில் உள்ள செயின் பால்ஸ் காம்ப்ளக்ஸ் மாடியில் ...