மக்களே உஷார்!! பார்ட் டைம் ஜாப் வேண்டுமா என ஏமாற்றுபவர்கள் அதிகம்… ரூ.1 கோடியே 51 லட்சத்து 27 ஆயிரம் மோசடி செய்த 3 கேடிகள் கைது.!!

ஆவடி: பூந்தமல்லியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது 64 என்பவர் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு டெலிக்ராம் ஆப்பில் வந்த லிங்கில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாக வந்த போலி செய்தியை பார்த்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட டாஸ்கை முடிக்க கூறினார்கள் . டாஸ்க் முடித்தவுடன் அதற்கேற்ப கணிசமாக கமிஷன் தொகை வரும் மோசடிக்காரர்கள் அளித்த நம்பிக்கையின் பேரில் அவரது கணக்கில் ஒரு சிறு தொகையை பார்த்தவுடன் அந்த கேடிகள் சொன்னது உண்மை என்று நம்பிய முத்து கிருஷ்ணன் உங்களுக்கு அதிக கமிஷன் கிடைக்க வேண்டுமானால் நாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் ரூபாய் 1 கோடியே 51 லட்சத்து 27 ஆயிரத்து 23 ரூபாயை போட வேண்டும் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள்.  கணக்கு கமிஷன் தொகையும் கிடைக்கவில்லை .போட்ட பணமும் கிடைக்கவில்லை என புகார் கூறினார்.

இதேபோல் எர்ணா ஊரைச் சேர்ந்த தில்லி குமாரி வயது 33 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு டெலிகிராம் ஆப்பி ல் ஒரு லிங்கில் வந்த செய்தியை பார்த்து அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் டாஸ்கை முடிக்க கூறினார்கள். அதற்கு ஏற்ப கமிஷன் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். ஒரு சிறு தொகையும் எனது வங்கி கணக்கில் போட்டார்கள். அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூபாய் 8 லட்சத்து 31ஆயிரத்து 61ஐ அனுப்ப சொன்னார்கள் .நான் போட்ட தொகையும் கமிஷன் தொகையும்  எனக்கு அனுப்பாமல் இருந்தனர் . இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் கி. சங்கரிடம் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் திறமையாக துப்புத் துலக்கி இன்டர்நேஷனல் கேடிகள் பட்டாபி ராமபுரத்தைத்தை சேர்ந்த மணிகண்டன் வயது 33 பெரம்பூரைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் சண்முக வேல் ஆகியோரை கைது செய்து முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் . அவர்கள் அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல குற்றவாளிகளை இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் அதி வேகமாக தேடி வருகின்றனர் . லிங்கில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்..