கோவை அருகே வேனில் கடத்தப்பட்ட 2650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவை குடிமை பொருள் வழங்கல்குற்றபுலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன்மேற்பார்வையில் டி.எஸ்.பி. ஜனனி பிரியா தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 53 மூட்டைகளில் 2650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரியும், அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மினி லாரி டிரைவரானகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மாங்காவு பகுதியைச் சேர்ந்த திலீப் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் நடத்தி விசாரணையில் உக்கடத்தைச் சேர்ந்த பாரூக் என்பவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி அருள் என்பவர் மூலம் கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது. தலைமுறைவாக உள்ள பாருக், அருள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..