வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 265 ஓட்டல்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள பர்கர் கிங் ஓட்டலில் கெவின் போர்டு (54) என்பவர் ...

சந்திரயான்-3, ஆக.23-ஆம் தேதி நிச்சயமாக நிலவில் இறங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இயக்குநா் நீலேஷ் எம்.தேசாய் தெரிவித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியிலுள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகமதாபாதில் உள்ள ...

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார். லடாக் பயணத்தின் போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை, மாநிலங்களவை, திட்டக் கமிஷன் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட பல அமைப்புகளை இந்தியா உருவாக்கியது. அதில் தற்போது ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை சேர்ந்தவர்களை உட்புகுத்த முயற்சி செய்கிறது என்று கூறினார். மேலும் அவர் ...

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது தொகுதி பொதுமக்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான ...

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 24 வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து இருதரப்புப் பயணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி கிரீஸுக்குச் செல்கிறார். 40 ஆண்டுகளில் ...

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்.பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு. இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி ...

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பணியாளர் சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த் தைக்குப் பிறகு அமைச்சர் முத்து சாமி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக ...

கோவை எம்.என்..ஜி.வீதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் பீபாஸ் குச்சத்(வயது 35) இவரது தங்கபட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு தகவல் வந்தது . அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரின்காஷ் குச்சனய் (வயது 15 ) ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம்(38) என்ற நபர் வழக்கு சம்பந்தமாக சரிவர நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜாராம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு, பிரைம் அவன்யூவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஜமுனா (வயது 55) இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து வடகோவையில் உள்ள அந்த கல்லூரிக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கல்லூரி பஸ் ...