தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் தமிழகம் திரும்ப உள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ ...

5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை முழுவீச்சில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாத் துறையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா ...

சென்னை : தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் 2020ம் ஆண்டு ரூ.12,504 கோடி முதலீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டு முதலீடு ரூ.17,896 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 53% முதலீடுகள் அக்டோபர் முதல் ...

நாடு முழுவதும் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தால் அத்தியாவசியப் பணிகள் ஏதும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுத் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இரு நாள்களும் 1 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு ...

இந்த கூட்டமைப்பில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும் இதை ஆதரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. தமிழகத்திலும் ...

வேலூரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மின் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுந்துள்ளது. மின் வாகனங்களின் பயன்பாடு குறித்து நிபுணர்கள் வாயிலாக தெரிந்து கொண்ட தகவல்கள் என்னென்ன பார்க்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, நடுத்தர மக்களின் பார்வை தற்போது மின்சார வாகனங்களின் ...

வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து வருபவர் துரைவர்மா. இவர் நேற்று இரவு தனது எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். இந்நிலையில், திடீரென எலக்ட்ரிக் பைக்கில் ...

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ...

பாஜகவின் வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வரவேற்பதாக தெரிவித்தார். ஆனால் மற்றொரு கருத்தையும் அவர் திமுகவினருக்கு கூறியுள்ளார். புதுச்சேரியில் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேசிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் ...

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது, பிரச்சாரத்தின் இறுதி நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக அன்புமணி ...