5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா- மத்திய அரசு அறிவிப்பு.!!

5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை முழுவீச்சில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாத் துறையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.