கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சி.எம்சி காலனி பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது .அங்குள்ள 700 வீடுகள் இடித்த அகற்றப்பட்டன. மேலும் அங்கு 90 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்யும்படி நோட்டீஸ் ...

கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர். குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா திருமண மண்டபத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் காலையில் இருந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மைதானத்தில் நடத்தாமல் திருமண மண்டபத்திற்கு வைத்து சிறப்பு தொழுகை நடந்தது. இந்த ...

கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் கடந்த சில நாட்களாக காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. கோவை அருகே உள்ள ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை ...

கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அக்டோபர் 2021 வரை லதா (வயது 26) என்பவர் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் பில்லிங் பிரிவிலும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அந்த ஆஸ்பத்திரியில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அதில், ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பதிலாக தவறுதலாக வேறு வங்கி கணக்கிற்கு ரூ.14.75 லட்சம் சென்றது. இது குறித்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ...

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி ...

கோவை உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீனில் ரசாயன வாசம் வருவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் ...

கோவை விளாக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 49). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அங்கு மாசிலாமணி முதல் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழந்தார். இதைகண்டு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). விவசாயி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது வீட்டில் வேலை செய்வதற்காக அன்னை நகரை சேர்ந்த அங்கம்மாள் (64) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந் தேதி செல்வராஜின் மகள் இந்துமதி தன்னுடைய நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். 7-ந் தேதி ...