பொது இடங்களில் ஒட்டப்பட்ட தி.மு.க வினர் போஸ்டர்கள் : கிழித்தெறிந்த பா.ஜ.க வினர் – தடியடி நடத்திய போலீசார் கோவையில் பரபரப்பு…

பொது இடங்களில் ஒட்டப்பட்ட தி.மு.க வினர் போஸ்டர்களை கிழித்தெறிந்த பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீசார் தடியடி  கோவையில் பரபரப்பு…

பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பிற இடங்களில் ஒட்டப்பட்ட அனைத்துக் கட்சியினரின் போஸ்டர்கள் கோவை மாநகராட்சியால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக பலர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தின் தூண்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை தி.மு.க வினர் ஒட்டி இருந்தனர் இதை அப்புறப்படுத்த வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கோவை மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் இரவு நேரத்தில் குவிந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பாலத்தின் தூண்களின் ஒட்டப்பட்டு இருந்த திமுகவினரின் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தி கோவை அவிநாசி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டது காவல்துறையினர்